சுந்தரவள்ளின்னா சூறாவளிடா... தலைக்கவசம் இல்லாமல் போலீசை அலறவிட்ட சம்பவம்..!
தலைக்கவசம் அணியாமல் இருசக்கரத்தில் வந்த பேராசிரியை சுந்தரவள்ளி, வாகன சோதனையின் போது மறித்த போலீஸ்காரர் காலில் வாகனத்தை ஏற்றி ரகளை செய்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை போரூர் பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்தவழியாக திராவிட கழக பேச்சாளரும் பேராசிரியையுமான சுந்தரவள்ளி இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படுகின்றது.
சுந்தரவள்ளியை அமரவைத்து ஸ்கூட்டரை ஓட்டி வந்த இளைஞரை போலீசார் மடக்கிப்பிடிக்க, அந்த இளைஞர் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரின் காலில் வாகனத்தை ஏற்றியதாக கூறப்படுகின்றது.
இதனை தட்டிக்கேட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரை அடிக்க பாய்ந்த இளைஞர் கடும் வாக்குவாதம் செய்தார்.
இதையடுத்து தலைக்கவசம் அணியாமல் வந்ததற்காக 1000 ரூபாய் அபராதம் விதித்த போலீசார், விபத்து ஏற்படுத்தியதால் வாகனத்தை பறிமுதல் செய்வதாக கூறியதால் சுந்தரவள்ளி கோதாவில் இறங்கினார்.
அவருடன் வந்திருந்த இளைஞர் மீண்டும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீஸ்காரரை செல்போனில் படம் பிடித்த படியே மருத்துவமனைக்கு வருமாரு அழைத்தனர்.
ஒரு கட்டத்தில் ஆட்டோவில் ஏறிச்செல்லலாம் என்று அந்த இளைஞர் அழைக்க சுந்தரவள்ளியின் எதிர்ப்புக்குரலால் பயந்து போன போலீசார் அவரை வாகனத்தை எடுத்து ச்செல்ல அனுமதித்தனர்.
இதையடுத்து புலம்பியபடியே சுந்தரவள்ளி இரு சக்கர வாகனத்தில் ஏறிச்சென்றார்.
இதற்கிடையே சுந்தரவள்ளி மற்றும் அவருடன் வந்த இளைஞர் , கர்ப்பிணியான தன்னை தாக்க முயன்றதாக போக்குவரத்து உதவி பெண் காவல் ஆய்வாளர் எஸ்.ஆர்.எம்.சி. காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சுந்தரவள்ளி மற்றும் அவருடன் வந்த இளைஞரை விசாரணைக்கு அழைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
Comments